சம்பந்தனின் விருப்பில் ஹக்கீம் பாடிய தாலாட்டு! (புருஜோத்தமன் தங்கமயில்)
- Wednesday, 27 July 2016 06:53
தமிழ் மக்களை 'கட்டாய சுய உறக்கத்துக்குள்' வைத்துக் கொள்ளும் முனைப்பில் பல தரப்புக்களும் விட்டுக் கொடுப்பின்றி ஈடுபட்டு வருகின்றன. அரசியல் உரிமைப் போராட்டங்களில் மூர்க்கமாக ஈடுபட்ட தரப்பான தமிழ் மக்களை உறக்க நிலையில் வைத்திருப்பதன் மூலம், போராட்ட குணத்தையும் அதற்கான அர்ப்பணிப்பையும் நீர்த்துப் போகச் செய்யலாம் என்பது சம்பந்தப்பட்ட தரப்புக்களின் எதிர்பார்ப்பு. அதற்காகவே, தமிழ் மக்களை நோக்கி அபசுரங்களுடனான தாலாட்டுக்கள் தொடர்ச்சியாகப் பாடப்படுகின்றன.
மன்னாரில் வைத்து சம்பந்தர் சொன்னது என்ன?! (நிலாந்தன்)
- Sunday, 24 July 2016 06:11
கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் போன்ற கருத்துருவாக்கிகள் ஒன்றாகச் சந்தித்த மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. கடந்த 7 ஆண்டுகளில் இப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தது இதுதான் முதல் தடவை எனலாம்.
நிஷாவின் ஆணையும், அடங்கும் கூட்டமைப்பும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- Wednesday, 20 July 2016 08:13
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், தன்னுடைய பிரத்தியேக அலுவலகமொன்றை கொழும்பில் அமைத்துக் கொள்ளும் அளவுக்கான ஆர்வத்தோடு இருக்கின்றார். அவர், கடந்த 20 மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட தடவைகள், இலங்கை வந்து சென்றிருக்கின்றார். அண்மைய காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் அதிக நேசத்தோடு அழைக்கப்படும் இராஜதந்திரியாகவும் அவர் இருக்கின்றார். பல நேரங்களில் அவர், வெளிநாட்டு இராஜதந்திரி என்கிற நிலைகள் கடந்து உள்ளூர் அரசியல்வாதி போல வலம் வருகின்றார். அவரை கோயில்களிலும், விகாரைகளிலும் காண முடிகின்றது. ஏன், தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளிலும் கூட காண முடிகின்றது.
ஓமந்தையும் தாண்டிக்குளமும்; குழம்பி நிற்கும் கூட்டமைப்பும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- Wednesday, 13 July 2016 07:00
வவுனியா மாவட்டத்துக்கான பொருளாதார மையத்தை ஓமந்தையிலா? தாண்டிக்குளத்திலா? அமைப்பது என்பது தொடர்பிலான சர்ச்சை கடந்த சில வாரங்களாக மேலெழுந்திருக்கின்றது. சர்ச்சைகள் இன்றி உள்ளக பேச்சுக்களினூடாக இறுதி முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டிய விடயமொன்றினை வடக்கு மாகாணத்தை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் சர்ச்சையாக மாற்றிவிட்டிருக்கின்றார்கள். அது, மக்களிடையே குறிப்பிட்டளவான குழப்பங்களையும் குரோதங்களையும் ஏற்படுத்தக் காரணமாகி விட்டது.
புலம்பெயர் சமூகத்தினைக் குறிவைக்கும் போலிகளின் நீட்சி! (புருஜோத்தமன் தங்கமயில்)
- Wednesday, 06 July 2016 06:48
பிரான்ஸில் அண்மையில் நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவில் சீமானின் 'நாம் தமிழர் கட்சி' கூடாரமொன்றை அமைத்து நிதி சேகரிப்பில் ஈடுபட்டிருந்ததாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார். குறிப்பாக, உலகத் தமிழர்களின் நலனுக்காக 17 அமைப்புகளை உலகம் பூராவும் உருவாக்கப் போவதாக, நாம் தமிழர் கட்சியினரால் அங்கு தெரிவிக்கப்பட்டதாகவும், தமிழகத் தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சியொன்று ஈழத் தமிழர்களிடத்தில் இவ்வாறு ஊடுருவியிருப்பதன் நோக்கம் உண்மையில் எவ்வகையானது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஜெனீவாவுக்குப் போதல்! (நிலாந்தன்)
- Sunday, 03 July 2016 04:56
தமிழ் மக்கள் காசிக்கு போவதுண்டு. கதிர்காமத்திற்கு போவதுண்டு, மடுவிற்கு போவதுண்டு. அவையெல்லாம் புன்ணியம் தேடிப் போகும் மத யாத்திரைகள். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தழிழர்களுடைய வாழ்க்கையில் இணைந்திருக்கும் ஒரு புதிய அம்சம் 'ஜெனீவாவுக்கு போதல்.' இது நீதி தேடிப் போகும் ஓர் அரசியல் யாத்திரை. ஜெனீவாவிற்கு தாயகத்திலிருந்தும் ஆட்கள் போகிறார்கள். டயாஸ்பொறாவிலிருந்தும் போகிறார்கள். அரசியல்வாதிகள் போகிறார்கள். செயற்பாட்டாளர்கள், சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள் போகிறார்கள். ஊடகவியலாளர்கள் போகிறார்கள். என்.ஜி.ஓ. அலுவலர்கள் போகிறார்கள். இவர்களோடு சில சமயங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்தும் சிலர் ஜெனீவாவிற்கு போய் வருகின்றார்கள். இதில் சிலர் ஜெனீவாவிற்கு போவதுண்டு. திரும்பி வருவதில்லை. அங்கேயே தஞ்சம் கோரி விடுகிறார்கள்.
ஜெனீவாத் திருவிழாவும், காவடிகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- Wednesday, 29 June 2016 07:31
ஜெனீவாத் திருவிழாவின் இன்னொரு முக்கிய நாள் இன்று. அதாவது, ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத் தொடரில், இன்று (ஜூன் 29, 2016) மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், இலங்கை தொடர்பிலான வாய்மூல அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார். அத்தோடு, இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார்.
நல்லாட்சி சவாரியில் டக்ளஸும், தொண்டமானும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- Wednesday, 22 June 2016 07:04
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை, எதிர்வரும் நாட்களில் மேலும் விரிவுபடுத்தப்படலாம் என்று பேச்சு நிலவுகின்றது. இதன்போது, முன்னாள் அமைச்சர்களான, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானும் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், சிறுபான்மைக் கட்சிகள், பெரும்பாலும் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்த போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்த சிறுபான்மைக் கட்சிகளில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி), இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் பிரதானமாவை. அப்படிப்பட்ட நிலையில், அந்தக் கட்சிகளை அரசாங்கத்துக்குள் இணைத்துக் கொள்வது தொடர்பிலான பேச்சுக்கள் கவனம் பெறுவது இயல்பானது.
யாரை நோக்கியது மைத்திரியின் நல்லிணக்க உரையாடல்?! (புருஜோத்தமன் தங்கமயில்)
- Wednesday, 15 June 2016 06:49
முரண்பாடுகளின் அனைத்து வடிவ இடர்பாடுகளையும் அழிவினையும் சந்தித்து நிற்கின்ற நாடொன்றின் முன்னோக்கிய பயணம், நீதி பரிபாலனம், பரஸ்பர நம்பிக்கை உள்ளிட்டவற்றினூடு கட்டமைக்கப்படும் நல்லிணக்கத்தினூடே சாத்தியமாகும். சுதந்திர இலங்கைக்கான பேச்சுக்கள் ஆரம்பித்த காலத்தில் தோற்றம் பெற்ற அரசியல் பிரச்சினைகளும் அது ஏற்படுத்திவிட்ட இனமுரண்பாடுகளும், இலங்கையை இன - மத- பிராந்திய ரீதியாகப் பிளவுபடுத்தி விட்டிருக்கிறது. அதுவே, பெரும் ஆயுத மோதல்கள் தோன்றுவதற்கும் காரணமாகியது.
More Articles...
- சாட்சிகளின் காலமா? அல்லது என்.ஜி.ஓக்களின் காலமா?! (நிலாந்தன்)
- சாலாவ ஆயுதக் களஞ்சிய வெடிப்பும்- சில கேள்விகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- யாழ்ப்பாணம்தான்; வாள்ப்பாணம் இல்லை?! (நிலாந்தன்)
- தமிழ் ஊடகப் பரப்பும், அகற்றப்பட வேண்டியவையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- புலிக்கொடியை முன்னிறுத்திய சண்டைகள்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- நினைவு கூர்தல் – 2016 (நிலாந்தன்)
- ஜெயாவின் வெற்றி முகமும், திமுகவின் பெரும் சோகமும்! - புருஜோத்தமன் தங்கமயில்
- முள்ளிவாய்க்காலில் இருந்து எழுந்து வருதல்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- தமிழகத் தேர்தல் 2016 : வெற்றி முகம்
- சங்கரி கூட்டிய புதிய கூட்டணி! (புருஜோத்தமன் தங்கமயில்)
- ஆதிரை; போர் செலுத்திய மனிதர்களின் கதைகள்!
- இறந்தவர்களை நினைவுகூர்வது என்பது கட்சி அரசியல் அல்ல! (நிலாந்தன்)
- தமிழரசுக் கட்சியின் சுழியோட்டம்; கூட்டமைப்பின் சிதைவுக் காலம்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- வடக்கு மாகாண சபையின் யோசனைகளும், எதிர்வினைகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- சம்பந்தனின் அரசியலும், திமிரும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- மடை மாற்றும் தரப்புக்களை உணர்ந்து கொள்ளுதல்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- தமிழர் அரசியல் ‘குறிக்கோள்களை’ புறந்தள்ளிய யதார்த்த அரசியலுக்குள் செல்லவில்லை!
- வெடிபொருட்கள் மீட்பு சம்பவமும் சில செய்திகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- ஒரு கூர்வாளின் நிழலில்; தமிழினி முன்வைக்கும் அரசியலும், படிப்பினையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
- சரத் பொன்சேகா: ரணிலின் புதிய போர்க் கருவி! (புருஜோத்தமன் தங்கமயில்)