தமிழக மீனவர்கள் இன்று மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை
- Friday, 29 July 2016 06:51
ராமேஸ்வரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, சென்னை ஆகிய மாவட்ட மீனவர்களின் பிரதிநிதிகள் இன்று டெல்லி சென்றுள்ளனர்.
கடந்த பல் ஆண்டுகளாகவே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை பிடித்து வைப்பதுமான நிலை நீடித்து வருகிறது. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும்,அவர்களது படகுகளை இலங்கை அரசு விடுதலை செய்வதில்லை. எனவே, மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இரு நாட்டு அரசு, இரு மனதில் அரசு, இரு நாட்டு மீனவர்கள் தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் அவ்வப்போது வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள் மத்திய அரசுடன் இதுக் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி சென்றுள்ளனர். முன்னதாக இவர்கள் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர் என்று தெரிய வருகிறது.