அப்போலோ 11 நிலவில் கால் பதித்த நிகழ்வின் 47 ஆவது நிறைவு நாள் : அதிர்ச்சித் தகவல்கள்
- Thursday, 21 July 2016 00:13
நேற்று வியாழக்கிழமை ஜூலை 20 ஆம் திகதி அப்போலோ 11 விண்கலம் மூலம் நிலவுக்குச் சென்று நீல் ஆம்ஸ்ட்ரோங் சந்திரனில் கால் பதித்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க நாள். ஆனால் இன்று உலகில் உள்ள பல மக்கள் நிலவில் கால் தடம் பதித்த இந்த நிகழ்வு பொய்யாக சித்தரிக்கப் பட்ட ஒன்று என நம்புகின்றனர் என்பதை நீங்கள் அறிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள்.
அமேசன் காட்டு மரங்களைச் சார்ந்த உயிரினங்களைக் கண்டுபிடிக்க மாத்திரம் 300 வருடங்கள் ஆகுமாம்!
- Wednesday, 13 July 2016 22:31
தென் அமெரிக்காவின் அமேசன் நதியைச் சார்ந்திருக்கும் உலகின் மிகப் பெரிய வனமான அமேசன் காட்டில் இதுவரை கண்டு பிடிக்காத மரங்கள் மற்றும் மரம் சார்ந்த உயிரினங்களின் எண்ணிக்கையும் அவற்றைக் கணக்கிட எடுக்கும் காலமும் அதிர வைப்பதாக உள்ளது. மரம் சார்ந்த உயிரின வகைகள் மாத்திரம் 16 000 என அண்ணளவாகக் கணிக்கப் பட்டுள்ளதுடன் இவை அனைத்தையும் கண்டு பிடிக்க 300 வருடங்கள் எடுக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.
உலகின் 50 சிறந்த உணவு விடுதிகளில் இத்தாலியின் ஒஸ்டெரியா ஃபிரான்செஸ்கானா முதலிடம்!
- Monday, 20 June 2016 14:00
அண்மையில் வெளியிடப் பட்ட உலகின் 50 சிறந்த உணவு விடுதிகளின் பட்டியலில் வடக்கு இத்தாலியின் சிறிய நகரங்களில் ஒன்றான மொடெனாவில் அமைந்துள்ள ஒஸ்டெரிய ஃபிரான்செஸ்கானா என்ற உணவகம் முதலிடம் பெற்றுள்ளது. இது கடந்த வருடம் முதலிடத்தில் இருந்த ஸ்பெயினின் மிகப் பிரசித்தமான உணவகமான எல் செல்லெர் டே கான் றொக்கா இனை 2 ஆம் இடத்துக்கு தள்ளி விட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் 19 ஆம் நூற்றாண்டில் பிறந்த கடைசி தனிநபரும் மறைவு!
- Saturday, 14 May 2016 07:15
கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் மற்றும் அமெரிக்க அரசின் அதிகாரப் பூர்வமான பிறப்புச் சான்றிதழ் பதிவுகளின் படி உலகில் மிக வயதான நபர் என்ற பட்டத்தைப் பெற்றிருந்த சுசன்னாஹ் முஷாட் ஜோன்ஸ் என்ற பெண்மணி தனது 116 ஆவது வயதில் காலமாகி விட்டதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப் பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய துகள் முடுக்கி CERN இன் பவர் கேபிளை மரநாய் கடித்தது!:செயற்பாடு இடைநிறுத்தம்
- Tuesday, 03 May 2016 00:37
நாம் வாழும் இப்பிரபஞ்சத்தின் இரகசியங்களை அறிய பூமியில் மனிதன் மிகப் பெரும் பொருட் செலவில் அமைத்த ஆய்வு கூடமே சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகருக்கு அண்மையில் அமைக்கப் பட்ட CERN என்ற துகள் முடுக்கி (atom smasher) ஆகும். LHC (Large Hadron Collider) என அழைக்கப் படும் இந்த எந்திரம் 2009 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக ஒரு பறவை எலெக்ட்ரிக்கல் யூனிட்டில் வைரம் போன்ற கடினமான கல்லை வீழ்த்திச் சென்றதால் அதிகம் சூடாகி பழுதடைந்து இருந்தது. இதைச் சரி செய்வதற்கே ஒரு வருடமும் மில்லியன் டாலர்கள் பொருட் செலவும் ஏற்பட்டு இருந்தது.
'கேஸ்பர்' (Casper) என அழைக்கப் படும் இந்த ஆக்டோபொட் பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Monday, 07 March 2016 00:04
கேஸ்பர் (Casper) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உலகில் பிரசித்தமான சிறுவர்களுக்கான கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் கதாபாத்திரம் பற்றி சிலவேளை அறிந்திருப்பீர்கள்.