ஜனவரி 25 முதல் 30 வரை தேசிய உடற்பயிற்சி வாரம்!
- Thursday, 21 January 2016 10:22
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை தேசிய உடற்பயிற்சி வாரம் அனுஷ்டிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.