உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ரத்த தானம்
- Friday, 03 July 2015 20:01
உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ரத்த தானம் செய்தனர்.
மருத்துவர்கள் இந்த நாட்டுக்கு எத்தனை அளவு முக்கியமானவர்கள் என்பதை உணர்த்தும் பொருட்டு மட்டுமின்றி, மருத்துவர்களும் விழிப்புணர்வுடன் தங்களது உடலை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று, உலக மருத்துவர்கள் தினம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதனையொட்டி தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள மருத்துவர்கள் ரத்த தானம் செய்து தங்களது மனித நேயத்தை வெளிப்படுத்தினர். அதோடு மக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்று, தங்களது உடலின் அத்தனை உறுப்புக்களும் சரியாக உள்ளனவா என்கிற மாஸ்டர் செக்-அப் செய்துக்கொண்டனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.