திரைப்பட பெயர்களை பதிவு செய்வதில் வெளிப்படைத் தன்மை தேவை: இயக்குனர்கள் சங்கம்
- Thursday, 28 July 2016 19:01
திரைப்பட பெயர்களை பதிவு செய்வதில் வெளிப்படைத் தன்மை தேவை என்று இயக்குனர்கள் சங்கம் இன்று, தயாரிப்பாளர்கள் சங்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர்.
திரைப்படத்தின் பெயர்கள் பதிவு செய்துவரும் முறை கால காலமாக இருந்து வருவதாகவும்,ஆனால், அந்த படத்தின் பெயர்களை வேறு யாராவது வைத்து, இதனால் பிரச்சனை வருகிறது என்றும், எனவே, படத்தில் தலைப்புக்களை பதிவு செய்வதில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று, கடந்த 5 வருடங்களாக திரைப்பட இயக்குனர்கள் சங்கம் கோரிக்கை வைத்து வருவதாகவும் தெரிகிறது. ஆனால், இதுவரை இதற்கு நடவடிக்கை எடுக்காத தயாரிப்பாளர்கள் சங்கத்தை எதிர்த்து, இன்று அவர்கள் சங்கத்தை முற்றுகையிட்டு, திரைப்பட இயக்குனர்கள் சங்கம் போராட்டம் நடத்தியது.
தலைப்புக்களை பதிவு செய்வதில் வெளிப்பட்டது தன்மை இல்லாததால், தலைப்புக்களை பேரம் பேசி விற்கும் அவல நிலையம் ஏற்படுகிறது என்றும், பிரச்சனைகளும் வருவதால், திரைப்படத்தின் பெயர்களை பதிவு செய்வதில் வெளிப்படைத் தன்மை வேண்டும், இணைய தளத்தில் பதிவு செய்த திரைப்படத்தின் பெயர்களை வெளியிட வேண்டும் என்றும் இணயக்குனர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். அப்படி தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்யாத பட்சத்தில், நீதிமன்றத்தில் இதுக் குறித்து வழக்கு தொடரப்படும் என்றும் இயக்குனர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.