ஹிந்துத்வாவை பாஜக தலைவர்கள் இன்னமும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் - ஹெச்.ராஜா
- Tuesday, 12 July 2016 07:21
தமிழக பாஜகவில் முக்கிய தலைவர்கள் என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருபவர் காரைக்குடியைச் சேர்ந்த ஹெச்.ராஜாதான். எந்தவித ஊழல் குற்றச்சாட்டுக்களும் கிடையாத கறைபடாத கரங்களுக்குச் சொந்தமானவர் எனக் கருதப்படும் இவர், மனதில் பட்டதை அப்படியே கூறிவிடுவார். அதனால் உண்டாகும் சர்ச்சைகள் குறித்தெல்லாம் இவர் கவலைக்கொள்வதில்லை.
மத்தியில் ஆளும் காட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி என்ற வகையில் அவரைச் சந்தித்த போது;
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி எப்படி உள்ளது?
தமிழகத்தில் பாஜக வளர்ச்சி என்று கேட்டால், சொல்ல முடியாத நிலையில்தான் உள்ளது. மத்தியில் செல்வாக்கு உள்ளதை வைத்துதான் பாஜகவை பார்க்க வேண்டும். காரணம் என்ன என்றால் தமிழக மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி வேண்டுமா, வேண்டாமா என்பதுதான் அது. கருணாநிதி ஆட்சி வேண்டும் என்றால் அவருக்கு வாக்களிக்கிறார்கள். வேண்டாம் என்று முடிவெடுத்தால், அதிமுகவுக்கு வாக்களிக்கிறார். இதுதான் தமிழக மக்களின் நிலைப்பாடு.
பாஜக ஹிந்துத்வாவை வலியுறுத்துகிறது என்று பலத்த குற்றச்சாட்டுக்கள் உள்ளன. பல்வேறு சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் உள்ளனவே. இதுக் குறித்து?
என்னைப் பொறுத்தவரை பாஜக தலைவர்கள் ஹிந்துத்வாவை இன்னமும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்பதுதான். எந்தவிதமான சர்ச்சைகள் குறித்தும் கவலைப்படக் கூடாது. தமிழகத்தில் திமுகவும்,அதிமுகவும் வாக்குகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை பெரியார் சிலைக்கு மாலை போடும் அதிமுகவும், திமுகவின் கொள்கையுடைய கட்சிதான் என்று சொல்வேன். என்ன, திமுகவினர் கோயிலுக்குச் செல்ல மாட்டார்கள், அதிமுகவினர் கோயிலுக்குச் செல்வார்கள். ஆனால், இருவருமே பெரியார் சிலைக்கு மாலையிடுகிறார்கள் என்றால், இதில் என்ன வேறுபாடு இருக்கிறது.மக்களிடம் ஹிந்துவா கொள்கையை சீரழிக்க வந்தவர்கள் இவர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும்..ஒரு பாரம்பரிய கோயில் சீரமைக்கப்பட வேண்டும் என்கிற நிலையில்தான் அரசு அந்த கோயிலை எடுத்து மூன்று வருடங்கள் பராமரித்து சீரமைத்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால், இங்கு அப்படியா நடக்கிறது. அனைத்துக் கோயில்களையும் அரசே எடுத்துக்கொண்டு, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு என்கிற பெயரில் பல்வேறு சூழல்களையும் உருவாக்கி, கோயிலுக்கு நிலமில்லை என்கிற ரீதியில் இப்போதான சூழல் என்றாகி உள்ளது. ஒரு இஸ்லாம் வழிப்பாட்டுத் தலம் இஸ்லாம் மக்களிடம் உள்ளது. ஒரு கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலம் என்பது அந்த கிறிஸ்தவ மக்களிடம் உள்ளது. ஆனால்,ஹிந்து கோயில் மட்டும், அரசிடம் உள்ளது. இந்தநிலை எதற்காக? ஒரு இஸ்லாம் தலைவர் இறந்தால் உடனடியாக அரசு இழப்பீடு வழங்குகிறது. இதே ஒரு ஹிந்து தலைவர் இறந்துவிட்டால் கண்டு கொள்வதில்லை. இதெற்கெல்லாம் என்ன காரணம்? இவர்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல்கி இவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதால்தான். இதைத்தான் ஹிந்து துரோகம் என்று சொல்கிறேன்.
பாஜக இப்போது இதை மாற்றும் முயற்சியில்தான் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பதை நிறைவேற்றி உள்ளது. இரண்டாவதாக மதமாற்றுத் தடைச் சட்டம் அமல்படுத்தி உள்ளது.எனவே, ஹிந்துத்வாவை பாஜக தலைவர்கள் இன்னமும்
அழுத்தமாகச் சொல்ல வேண்டும். இதைக் கொண்டு சேர்க்கத் தொண்டர்கள் வேண்டும், இந்த தொண்டர்கள் மூலமாகத்தான் ஹிந்து என்கிற அடையாளம் விரிவடையும்.இந்த அடையாளம் தேவைப்படுகிற காலக்கட்டம் என்பதால், ஹிந்துவாவை தலைவர்கள் இன்னமும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.
1989ம் ஆண்டு அத்வானி அவர்கள் சென்னை மெரீனா கடகரையில் உரை நிகழ்த்தியது இன்னும் என் நினைவில் உள்ளது. அதாவது ராம ஜென்ம பூமி என்கிற இயக்கத்தைத் துவக்க உள்ளேன். இதில் ராமர் கோயில் காட்டியேத் தீர வேண்டும் என்பது முடிவு. இதை ஆதரிக்கிறேன் என்றோ, அல்லது ஆதரிக்க மாட்டேன் என்றோ, அல்லது நடுநிலை வகிக்கிறோம் என்றோ எந்த ஒரு ஹிந்துவும் சொல்லக் கூடாது. இந்த இயக்கத்தை ஒப்புக் கொள்கிறேன் என்று சொல்ல வைக்க என்னால் முடியும் என்று கூறினார். ஹிந்துத்வா எனப் பிதற்றுபவர்களுக்கு இதுதான் பதில்.
சமஸ்கிருதத்தைத் திணித்தால் இந்தித் திணிப்பை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தியதை போல, சமஸ்கிருத மொழிக்கு எதிராகவும் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்று திமுக தலைவர் திரு.மு.கருணாநிதி கூறியுள்ளாரே. இதற்கு தங்கள் பதில் என்ன?
கருணாநிதி தமிழுக்கு என்ன கிழித்தார்? தேவாரம், திருவாசகம் போன்று பெரும் காப்பியங்கள் எதுவும் படைத்தாரா? தொல்காப்பிய பூங்கா, வேலைக்காரி என்று ஏதோ எழுதி சமூகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தினார். பெண்களை இழிவுப் படுத்தினார்.பாலியல் உணர்வுகளை எழுத்தின் மூலம் தூண்டிவிட்டவர் கருணாநிதி.
இவரது மகள் ஹிந்தி படித்துள்ளார். பேத்திகள் ஹிந்தி படித்துள்ளனர்.பேரன்கள் ஹிந்தி படித்துள்ளனர்.ஆனால்,மக்களுக்கு என்று
பொதுவாக கொடுக்க நினைத்தால் அது திணிப்பா? இவரது மகன் ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியில் தமிழ் ஒரு பாடமாக்க கூட இல்லை. இவர் சமஸ்கிருதத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால், நான் இவரது பேத்தி நடத்தும் பள்ளியின் முன் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன்.
-எழில்செல்வி
2016 இல் சினிமா : ஒரு முன் பார்வை!
- Sunday, 03 January 2016 17:40
2016 இல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பாலிவூட் & ஹாலிவூட் திரைப்படங்கள் பற்றிய தொகுப்பு இது.
எல்லைகள் கடந்த விவரணத் திரை விழா VISIONS DU REEL
- Monday, 20 April 2015 23:38
மனித வாழ்வியலின் கூறுகளைக் கொண்டே பல்வேறு சினிமாக்கள் உருவாகின்றன. மனித வாழ்வியலுக்கு அப்பாலான விடயங்கள் காட்சியூடகமாகப் பதிவாகும்போது, அவை விவரணங்களாகின்றன.
2014 இல் 4தமிழ்மீடியா : சிறந்த சினிமா தொடர் பதிவுகள்!
- Sunday, 28 December 2014 12:14
2014 இல் 4தமிழ்மீடியாவில் வெளிவந்த கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் தொடரின் இணைப்புக்கள் இவை. தென்னிந்திய சினிமா துறையில் இளைய தலைமுறையினர் பலரின் எதிர்காலக் கனவு அல்லது இலக்கு கோடம்பாக்கம். வண்ணமயமான, இக் கனவுப்பட்டறையின் கதவுகள் இலகுவில் எவர்க்கும் திறந்து விடுவதில்லை. அதன் வாசல் திறப்பதற்கு முன் வரம் வேண்டித் தவம் கிடக்கும் இளையவர்கள் குறித்த புதிய கட்டுரைத் தொடர் " கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் ". சினிமாத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அத்துறை எவ்வாறு இயங்குகின்றது என்பது குறித்து அறிய ஆர்வமுள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய தொடர்.
பூஜை , மெட்ராஸ், மைந்தன் ஊடக சந்திப்பு : வீடியோ
- Saturday, 11 October 2014 13:46
பூஜை , மெட்ராஸ், மைந்தன் ஊடக சந்திப்பு : வீடியோ
கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 18
- Friday, 19 September 2014 11:04
சேரனிடம் உதவி இயக்குனராக இருந்த ஜெயந்தனுக்கு வந்த கண்டம் பற்றிதான் கடந்த எபிசோடில் ஆரம்பித்து நிறுத்தியிருந்தேன். பொக்கிஷம் படப்பிடிப்பின் போது அவருக்கு நிகழ்ந்த சம்பவங்களை சொன்னால், ஒரு உதவி இயக்குனரின் எல்லாவித பரிமாணத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 17
- Tuesday, 09 September 2014 09:52
டைரக்டர் ஷங்கர் மீது கோபம் வரும்...ஆனால் வேறு வழியில்லை!
கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 16
- Tuesday, 02 September 2014 09:30
நடிகர், நடிகைகளை படப்பிடிப்பு நடக்கும் ஸ்பாட்டுக்கு அழைத்து வருவதே ஒரு கலை. ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்காக லைட்டிங் செட் பண்ணிக் கொண்டிருப்பார் ஒளிப்பதிவாளர்.
அமரகாவியம், காவியத்தலைவன் பிரஸ் மீட் வீடியோ
- Thursday, 28 August 2014 08:53
அமரகாவியம், காவியத்தலைவன் பிரஸ் மீட் வீடியோ
More Articles...
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 15
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 14
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 13
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 12
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 11
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 10
- திருடன் போலீஸ், நீயெல்லாம் நல்லா வருவடா, என்ன பிடிச்சுருக்கா திரைப்பட இசை வெளியீட்டு வீடியோ
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 09
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 08
- த்ரிஷா , நயன், ஆர்யாவின் அமரகாவியம் இசை |சினி நிகழ்வு வீடியோ |புகைப்படங்கள்
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 07
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 06
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 05
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 04
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 03
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் - 02
- கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் 01
- யான் திரைப்பட பிரஸ் மீட் , ஒளிச் சித்திரம் இசை வெளியீடு வீடியோ
- வடிவேல் @ தெனாலிராமன் இசை வெளியீடு வீடியோ
- நடிகை ரித்திக்கா பத்திரிகையாளர்கள் சந்திப்பு வீடியோ