Saturday, Jan 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

ரஷ்யாவின் புதிய உளவு சட்டத்தைக் கண்டிக்கும் எட்வார்ட் ஸ்னோவ்டென்

அமெரிக்க உளவு நிறுவனமான NSA இன் முன்னால் உறுப்பினரும் அமெரிக்காவின் புலனாய்வு நடவடிக்கையில் இருந்த அத்துமீறல்களை வெளிக் கொண்டு வந்ததால் நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யால் அகதி அந்தஸ்து பெற்றவருமான எட்வர்ட் ஸ்னோவ்டென் ரஷ்யாவின் புதிய உளவு சட்டத்தைக் கண்டித்துள்ளார்.

Read more...

வெள்ளையர்களை குறிவைத்தா? : அமெரிக்காவின் டல்லாஸ் ஸ்னனைபர் தாக்குதலில் 5 போலிஸ் அதிகாரிகள் பலி

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் போலிஸ் அதிகாரிகள் மீது மர்ம நபர் ஒருவர் மறைந்திருந்து மேற்கொண்ட ஸ்னைபர் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5 போலிஸ் அதிகாரிகள் கொல்லப் பட்டும் 7 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். அண்மையில் அமெரிக்காவில் தொடர்ச்சியாக கருப்பினத்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் படும் சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் இத்தாக்குதல்களைக் கண்டித்து டெக்ஸாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரில் வியாழன் இரவு பேரணி ஒன்று நடந்து கொண்டிருந்தது.

Read more...

இஸ்தான்புல் தாக்குதலுடன் தொடர்புடைய 17 பேரைக் கைது செய்தது துருக்கி

கடந்த வாரம் இஸ்தான்புல் பிரதான விமான நிலையமான அட்டாடுருக்கில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 45 பேர் கொல்லப் பட்டும் நூற்றுக் கணக்கானவர்கள் காயம் அடைந்தும் இருந்தனர். இத்தாக்குதலுடன் தொடர்புடைய 17 சந்தேக நபர்களை முக்கியமாக வெளிநாட்டவர்களை துருக்கி அரசாங்கம் சிறைப் பிடித்துள்ளது.

Read more...

இஸ்ரேல் விமானத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!:பாதுகாப்பாக தரை இறக்கம்

நியூயோர்க்கில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் பென்-குரியன் விமான நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்த எல் அல் போயிங் 747 என்ற விமானத்துக்கு தீவிரவாதிகளால் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுவிக்கப் பட்ட போதும் அது பாதுகாப்பாக டெல் அவிவ் நகரில் தரை இறங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Read more...

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியான FAST இன் கட்டுமானத்தை நிறைவு செய்த சீனா!

நமது பிரபஞ்சத்தில் மனிதர்களுக்கு இணையான வேற்றுக் கிரக வாசிகள் (Aliens) உள்ளனரா என்பதைக் கண்டு பிடிப்பதற்கான பூமியிலுள்ள சர்வதேச நாடுகளின் தேடுதலில், மிகப் பெரிய FAST என்ற தொலை நோக்கியை அமைத்ததன் மூலம் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இயங்கவுள்ள இந்த தொலை நோக்கி 500 மீட்டர் விட்டமுடைய கோளத் துளைகளுடன் கூடிய 30 உதைப் பந்தாட்ட மைதானங்களின் அளவுடையதாகும்.

Read more...

சவுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைத் தாக்குதல்

திங்கட்கிழமை அமெரிக்கா தனது சுதந்திர தினத்தைக் கொண்டாட சில மணித்தியாலங்களுக்கு முன்னர் சவுதியின் மேற்கு நகரமான ஜெத்தாஹ் இல் அமெரிக்க துணைத் தூதரகம் அருகே வெளிநாட்டு தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

Read more...

சீனாவிலும் பாகிஸ்தானிலும் கனமழை வெள்ளம் மண்சரிவில் சிக்கி 200 பேர் வரை பலி

சீனாவிலும் பாகிஸ்தானிலும் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி 200 இற்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் இந்தக் கனமழை சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. தென் மற்றும் மத்திய சீனாவில் மாத்திரம் 1000 மைல் பரப்பளவுக்கு வெள்ளமும் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.

Read more...

பங்களாதேஷில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தேசிய துக்கம் அனுஷ்டிப்பு!

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் நேற்றுமுன்தினம் இரவு விடுதியொன்றில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்த வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 20 பேரை நினைவு கூரும் முகமாக இரண்டுநாள் தேசிய துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 

Read more...

பங்களாதேஷில் தீவிரவாதிகளின் பிடியில் பணயக்கைதிகளாக இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 13 பேர் மீட்பு!

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள விடுதியில் தீவிரவாதிகளினால் பயணக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 20க்கும் அதிகமானோரில் 2 இலங்கையர்கள் உள்ளிட்ட 13 பேர் இதுவரை (இன்று சனிக்கிழமை காலை 10.30 மணி) மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Read more...

More Articles...

comments powered by Disqus