Saturday, Jan 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

குடியரசுக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் குடியரசுக் கட்சி வேட்பாளாராக டொனால்ட் ஜே.டிரம்ப் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 எதிர்வரும் நவம்பர் 8ம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலையொட்டி, ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிகள் சார்பில் இறுதிவேட்பாளரை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

அதில் குடியரசு கட்சியின் சார்பில் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்துவந்த டொனால்ட் டிரம்ப் தறோது அக்கட்சியின் உத்தியோகபூர்வ ஜனாதிபதி வேட்பாளராக தெரிவாகியுள்ளார்.

உட்கட்சித் தேர்தல் தொடங்கிய காலம் முதல் தனக்கு எதிராக போட்டியிட்ட 16 வேட்பாளர்களையும் தோற்கடித்து தற்போது டிரம்ப் இவ்வெற்றியை பெற்றுள்ளார்.

அடிப்படையில் மிகப்பெரும் தொழிலதிபரான டிரம்ப் தனது தீவிர வலதுசாரிக் கொள்கைகளினாலும், பிரிவினைவாதம், இஸ்லாமியர்கள், குடியேறிகளுக்கு எதிரான கொளைகள் என்பவற்றினால் உலகளவில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பவர். தனது துணை ஜனாதிபதி பதவிக்கு அண்மையில் இவர் நியமித்த இந்தியானா மாநில ஆளுனர் மைக் பென்ஸும், டிரம்பின் கொள்கைகளைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுக் கட்சியின் சார்பில் முதன்முறையாக  டொனால்ட் ஜே.டிரம்ப் இப் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்த போது, அது ஒரு நகைச்சுவை என சிரித்தவர்கள் அதிகம். தற்போது குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் வரை அவரது உயர்வு அமெரிக்கர்களுக்கு மாத்திரமல்லாது, உலகம் முழுவதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டன் விரைவில் உத்தியோகபூர்வ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

comments powered by Disqus