Saturday, Jan 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

இந்தோனேசியாவின் மிகவும் தேடப் பட்டு வந்த போராளி சுட்டுக் கொலை!:போலிசார்

இந்தோனேசியாவின் மிகவும் தேடப் பட்டு வந்த குற்றவாளியான சாந்தோசோ என்பவர் சமீபத்தில் கொல்லப் பட்டமை இந்தோனேசிய அரசுக்கு மிக முக்கியமான வெற்றி என அந்நாட்டு அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 5 வருடங்களாக மிகத் தீவிரமாக தேடப் பட்டு வந்த குறித்த போராளி செவ்வாய்க் கிழமை தம்பரனா என்ற நகருக்கு அண்மையிலுள்ள கிராமம் ஒன்றில் பாதுகாப்புப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப் பட்டு விட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

கிழக்கு இந்தோனேசிய முஜாஹிடீன் அமைப்பின் தலைவனான சாந்தோசோ தனது ஆதரவாளர்கள் சிலரோடு மலைக் காடுகளில் மறைந்திருந்த போதே சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். முன்பு சாந்தோசோவைக் கொல்ல இந்தோனேசியா தனது ஆயிரக் கணக்கான படை வீரர்களைப் பயன்படுத்தி தேடுதல் நடத்தி வந்தது. இந்நிலையில் கொல்லப் பட்ட சாந்தோசோவின் உடல் அடையாளம் காணப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சாந்தோசோவின் தலைமையில் இந்தோனேசியாவில் 2000 ஆம் ஆண்டும் 2002 ஆம் ஆண்டு பாலியிலும் நடத்தப் பட்ட மோசமான குண்டு வெடிப்புக்களில் பல பொது மக்கள் உயிர் இழந்திருந்தனர்.

comments powered by Disqus