Saturday, Jan 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

ஜேர்மனி மற்றும் பிரான்ஸில் மறுபடி மர்ம நபர்கள் தாக்குதல் அச்சுறுத்தல்

ஜேர்மனி மற்றும் பிரான்ஸில் மறுபடி மர்ம நபர்கள் தாக்குதல் அச்சுறுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

ஜேர்மனியில் வெர்ஸ்பர்க் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் பேவரியா என்ற இடத்தில் 17 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் கோடாரிக் கத்தியினால் பயணிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்.

இத்தாக்குதலில் 20 பேர் படுகாயம் அடைந்ததாக ஜேர்மனி காவற்துறை செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். மேலும் ஆப்கான் அகதி என அடையாளம் காணப் பட்ட குறித்த  மர்ம நபர் போலிசாரால் சுட்டுக் கொல்லப் பட்டதாக பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  மறுபுறம் தெற்கு பிரான்ஸில் பொலினி என்ற இடத்திலுள்ள மெர்ஸில்லி நகரின் பார்முலா-1 என்ற ஹோட்டலில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் புகுந்ததாகவும் இதுவரை அப்பகுதிக்குள் சுற்றி வர போலிசார் குவிக்கப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இப்பகுதியில் வெடிகுண்டு அகற்றும் படையினரும் விரைந்துள்ளனர். இன்னமும் இந்த சம்பவம் குறித்து  பூரண தகவல்கள் வெளியாகவில்லை.

14 ஆம் திகதி  பிரான்ஸின் நைஸ் நகரில் பாஸ்டில் கொண்டாட்ட மக்கள் கூட்டத்தின் மீது லாரி ஏற்றி தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 84 பேர்  உயிரிழந்தும் 50 குழந்தைகள் உட்பட 120 இற்கும் அதிகமான மக்கள் எலும்பு முறிந்து படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

comments powered by Disqus