Saturday, Jan 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

லூசியானா துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 போலிசார் பலி

அமெரிக்காவில் இன்னொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் லூசியானாவில் அரங்கேறியுள்ளது. லூசியானா மாகாணத்தின் பேட்டன் ரோஜ் பகுதியில் கருப்பு நிற முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் திடீரென வெள்ளையின போலிசாரைக் குறி வைத்து நிகழ்த்திய இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 போலிசார் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை வீதியில் சென்ற சில நபர்கள் நேரில் பார்த்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பான சந்தேகத்தில் இருவரை போலிசார் தீவிரமாகத் தேடி வருவதுடன் 3 ஆவது நபரை சுட்டுக் கொன்று விட்டதாகவும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில வருடங்களாக போலிசார் மீது தொடர்ச்சியான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. முக்கியமாக இவை கருப்பின இளைஞர்கள் மீது போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தி மேற்கொண்ட சில கொலைச் சம்பவங்களுக்குப் பழி வாங்கும் விதத்தில் தான் மேற்கொள்ளப் படுகின்றன.

இந்நிலையில் திங்கட்கிழமை லூசியானாவில் நிகழ்ந்த சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடுக்கி விடப் பட்டுள்ளன. சமீபத்தில் தான் அமெரிக்காவின் டலாஸ் நகர்ப் பகுதியில் ஓர் கருப்பினத்தவர் 5 போலிசாரை சுட்டுக் கொன்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

comments powered by Disqus