Saturday, Jan 22nd

Last updateFri, 29 Jul 2016 3pm

துருக்கி அதிகாரக் கவிழ்ப்பு விடயத்தில் எர்டோகனுக்கு ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா எச்சரிக்கை

அண்மையில் துருக்கியில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிக்கப் பட்டது. இதில் ஈடுபட்டு கைதான இராணுவ அதிகாரிகளுக்கு துருக்கி அதிபர் எர்டோகன் தலைமையிலான அரசு மரண தண்டனை அளிப்பது தொடர்பில் மிகவும் பின் விளைவுகளை ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் இவர்களுக்கு அளிக்கப் பட வேண்டிய தண்டனை துருக்கியின் ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் பங்கம் விளைவிக்காததாக இருக்க வேண்டும் எனவும் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

 

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெர்ரி ஊடக அறிவிப்பில் துருக்கி அரசுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். மறுபுறம் ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு உறுப்பினர்களோ திங்கட்கிழமை மனித உரிமைகளை மீறி தோற்கடிக்கப் பட்ட இராணுவ புரட்சியாளர்களுக்கு மரண தண்டனை அளிக்கப் பட்டால் ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவத்தை பெற துருக்கி செய்யும் முயற்சி வீணாக நேரிடும் என எச்சரித்துள்ளனர்.

அண்மையில் தான் பிரிட்டன் அரசு உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2004 ஆம் ஆண்டு துருக்கியில் இடை நிறுத்தப் பட்ட மரண தண்டனை சட்டம் மறுபடி அமுல் படுத்தப் பட்டால் 2005 முதல் அது ஐரோப்பிய யூனியனில் சேர நடத்தி வரும் பேச்சுவார்த்தை நிறுத்தப் படும் என்றும் இதனை துருக்கி அரசு கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஜேர்மனி, ஆஸ்ட்ரியா மற்றும் பிரான்ஸ் என்பவை தனித்தனியாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளன. அதாவது ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் மரண தண்டனை சட்டத்தைக் கொண்டிருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

comments powered by Disqus