லசந்த படுகொலை வழக்கு; முன்னாள் பொலிஸ் மா அதிபரிடமும் விசாரணை!
- Friday, 29 July 2016 08:35
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு விசாரணைகளின் ஒருகட்டமாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர்.
லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்த காலப்பகுதியில் பொலிஸ் மா அதிபராக மஹிந்த பாலசூரியவே கடமையாற்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.