பிரிட்டன் வானத்தை அலங்கரிக்கும் வடக்கு துருவ ஒளி: Aourara!
- Wednesday, 09 March 2016 15:57
பிரிட்டனில் இவ்வார இறுதியில் ஞாயிற்றுக் கிழமை தொடக்கம் மாலை நேர வானை வடக்கு ஒளிக்கீற்று எனப்படும் வண்ணமிகு துருவ ஓளிக் கீற்றுக்கள் அலங்கரித்து வருகின்றன.
Aurora Borealis எனப்படும் இந்த ஒளிக்கூற்றுக்கள் மிக அரிதானவை என்பதுடன் இம்முறை தெற்குப் பகுதி வானையும் இவை அலங்கரித்துள்ளன.
பிரிட்டன் வானை அலங்கரிக்கும் பச்சை, நீல மற்றும் ஊதா வண்ண நிறக் கோர்வைகளைப் புகைப்படம் எடுக்கும் பொது மக்கள் சமூக வலைத் தளங்கள் மூலமாக பகிர்ந்தும் வருகின்றனர். மிக அரிதாகத் தோற்றமளிக்கும் மாலை வானின் Aurora ஒளிக் கீற்றுக்கள் வழமையாக ஸ்காட்லாந்து வான் பரப்புடன் நின்று விடும். சூரியப் புயல் காரணமாக அதில் இருக்கும் மூலக் கூறுகள் பூமியின் வளிமண்டலத்துக்குள் புகும் போது பூமியின் காந்தப் புலம் காரணமாக மாற்றம் அடைந்து Aurora என்ற ஒளிக் கூற்றாக பளிச்சிடுகின்றன. இதன் போதே வடக்கு ஒளி விளக்கு எனப்படும் Northern lights உம் தோன்றுகின்றது. Northern lights புகைப்படங்கள் உங்கள் பார்வைக்குக் கீழே: