உடல் பருத்தவர்கள் மெல்லியவர்களை விட புத்திக் கூர்மை குறைந்தவர்களாமே!:ஆய்வில் தகவல்
- Wednesday, 13 July 2016 22:27
பொதுவாக உடல் பருத்தவர்கள் மெல்லியவர்களை விட பலவானாக இருக்கக் கூடும். ஆனால் இவர்கள் மெல்லியவர்களை விட புத்திக் கூர்மை குறைந்தவர்கள் எனத் தற்போது ஆய்வொன்றின் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. ஒரு மனிதனின் புத்திக் கூர்மையைத் தீர்மானிக்கும் மூளையிலுள்ள கிரே மற்றும் வெள்ளைத் திசுக்களுக்கும் உடற் பருமனுக்கும் இடையேயான தொடர்பை ஒப்பிட்டுப் பார்க்கையில் தான் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.
மேலும் அர்ப்பணிப்புத் தன்மை சங்கற்பிக்கும் திறன் (will power) ஆகியவற்றைத் தீர்மானிக்கும் மூளையின் Salience வலையமைப்பை உற்று நோக்கியும் குறித்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இந்த வலையமைப்பில் உள்ள வெள்ளைத் திசுக்களும் (white matter), கிரே திசுக்களும் (Grey matter) உடல் பருத்தவர்களுக்கு மிகக் குறைவாக இருப்பதாக இந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர். உணவுக் கட்டுப்பாடு குறித்த ஆர்வம் இன்மை மற்றும் அதிக உணவு உட்கொள்ளும் பழக்கத்தைக் கட்டுப் படுத்த முடியாத மனநிலை போன்றவை கூட இவர்களது புத்திக் கூர்மை குறைவாக இருப்பதை சுட்டிக் காட்டும் வெளிப்படையான கூறுகளே என்றும் உணவு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஐரோப்பாவில் உடற்பருமன் அதிகம் உள்ளவர்கள் வசிக்கும் நாடு பிரிட்டன் ஆகும். இங்கு 67% வீத ஆண்களும் 57% வீத பெண்களும் வயதுக்கு ஏற்றதை விட அதிக எடை உடையவர்கள் ஆவர். அதிக உடற்பருமன் நீரிழிவு, மாரடைப்பு, போன்ற விளைவுகளுக்கு இட்டுச் செல்வதால் வளர்முக நாடுகளில் இதற்கான வைத்தியச் செலவு மாத்திரம் பில்லியன் டாலர்கள் வரை உயர்ந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு : Mail Online
http://www.dailymail.co.uk/health/article-3686878/Are-fat-people-intelligent-People-overweight-make-wrong-food-choices-grey-white-matter-brain.html