மற்ற பாலூட்டிகளை விட மனித இனத்தின் தாய்ப் பால் மிகச் சிறந்தது : ஆய்வில் தகவல்
- Tuesday, 26 April 2016 15:27
அண்மையில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வொன்றில் போசாக்கு மற்றும் சுகாதாரம் போன்ற விடயங்களில் மனித இனத்தின் அதாவது நமது தாய்மாரின் தாய்ப்பால் பூமியில் வசிக்கும் ஏனைய பாலூட்டி விலங்குகளின் தாய்ப்பாலை விட 7 மடங்கு அதி சிறந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது மனிதனின் தாய்ப்பாலில் 200 வெவ்வேறு வகைப் பட்ட தனித்துவமான மாச்சத்துக்களின் கலவை இருப்பதாகவும் இது ஏனைய பாலூட்டிகளினது மாச்சத்துக் கலவைகளை விட 7 மடங்கு அதிகம் என்பதே விஞ்ஞானிகளின் கூற்றாகும்.
மனித இன தாய்மாரின் இந்த தாய்ப்பாலில் காணப் படும் இவ்வாறான மிகத் தனித்துவமான மாச்சத்துக்களால் தான் பிறந்த குழந்தை வேகமாக வளரத் தொடங்கும் போது அதற்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நோய்க் கிருமிகளுடன் சண்டயிடும் சுகாதாரமான பக்டீரியா ஆகியவை கிடைக்கின்றன. தாய்ப்பாலுக்கு அடுத்ததாக பசுவின் பாலில் 30 மாச்சத்து வகைகளும் சோளப் பாலில் 50 மாச்சத்து வகைகளும் அடங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் ஓர் தாய் தனது பிள்ளைக்கு பாலூட்டும் போது அவள் பாலூட்டும் நேரத்தைப் பொறுத்து அவளது தாய்ப்பாலில் உள்ள மாச்சத்துக்களின் செறிவு வெவ்வேறு படும் எனவும் கூறப்படுகின்றது. மனித இனத்துக்கு மட்டும் ஏன் இந்த தனித்துவம் என்பது விஞ்ஞான ரீதியில் மர்மமான ஒன்று என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.