Thursday, Nov 21st

Last updateFri, 29 Jul 2016 3pm

விட்டாலும் விட மனசில்லாத த்ரிஷா

சேச்சே... சிம்புவுக்கு நான் அம்மாவாக நடிப்பதா? என்று கோபமுற்ற த்ரிஷா, வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுத்தார் அல்லவா? அந்த விஷயத்தில் ஒரு நல்ல திருப்பம். தமிழ்சினிமாவில் நடித்து சில வருஷங்களாச்சு. யாரு வந்தாலும் விடக்கூடாது. 

அப்படியே அமுக்கிடணும் என்று கடும் வெறியோடு காத்திருந்த ஸ்ரேயா அந்த வாய்ப்பை அப்படியே லபக்கிக் கொண்டிருக்கிறார். சம்பள விஷயத்தில் பெரும் தாராளம் காட்டிய ஸ்ரே, ‘நான் கூடக் குறையக் காஸ்ட்யூம் போட தயார்’ என்று சொல்ல, ‘ஐய்யோ மேம்... நீங்க சிம்புவுக்கு அம்மா. அப்படியெல்லாம் போட ப்டாது’ என்று எச்சரித்தாராம் டைரக்டர். இது ஒருபுறமிருக்க, நான் இந்த படத்தில் நடிக்கலேன்னாலும் பறவாயில்லை. ஆனால் இந்த படம் வெளிவரும் போது தியேட்டருக்குப் போய் பார்க்குற முதல் ஆள் நானாகதான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார் த்ரிஷா.

ஏன்? எங்கெங்க பிஞ்சுருக்குன்னா?

comments powered by Disqus