Friday, Jun 05th

Last updateFri, 29 Jul 2016 3pm

2014ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட பேஷன் ஆடைகளும் சிறந்த ஆடைப்பெண்மணிகளும்

பெண்ணாக பிறப்பெடுத்த அனைவரும் தம்மை அழகாக காண்பித்துக்கொள்ள புது புது பேஷன் ரகங்களை தேடி அணுகுவதுடன் அத்துறை சார்ந்த தகவல்களை அறிந்துகொள்வதிலும் ஆர்வமும் அக்கறையும் நிறைந்து காணப்படுகின்றனர்.

அவர்களுக்காகவே அங்காங்கே நவீன பேஷன் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு நவீன ஆடை அலங்காரங்கள் குறித்த புதுமைகளை அறிமுகபடுத்துகின்றனர். இத்துறை சார்ந்த பட்டப்படிப்புகளும் தற்போது மலிந்துள்ளதால் பெண்கள் மட்டுமல்லாது ஆண்கள் பலரும் பேஷன் துறைகளில் சாதித்து வருகின்றனர். இது இவ்வாறு இருக்க திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள வரும் திரை நட்சத்திரங்களின் பேஷன் ஆடைகள் கவர்ந்திலுக்கும் வண்ணம் இருக்கும். இவை "ரெட் கார்பேட் பேஷன்" என தனியாக அழைக்கப்படும் பேஷன் ரகங்களில் கடந்தாண்டு ஒஸ்கார் உள்ளிட்ட பிரபல ஹாலிவூட் திரைப்பட விழாக்களில் சிறந்த அல்லது அதிகம் பேசப்பட்ட பேஷன் ஆடைகளும், சிறந்த ஆடை அலங்கார பெண்மணிகள் பற்றியும் Mirror இணையத்தளம் பதிவிட்டிருக்கிறது.
 
1. லுபிதா நியாங் (Lupita Nyong'o)



31 வயதாகும் ஹாலிவூட் திரைப்பட நடிகையான Lupita Nyong'o என்பவருக்கு இவ்வாண்டின் சிறந்த ஆடை விருதை தந்திருக்கிறது. ஆஸ்கார் திரைப்பட விழாவின் போது லுபிதா அணிந்துவந்த நீல நிற பரடா முழு நீள ஆடை மிக அருமையாக அவரை காண்பித்திருக்கிறது. அதோடு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கார் விருதையும் லுபிதா பெற்றுக்கொண்டது குறிப்பிடதக்கது, ஹாலிவூட் வரலாற்றில் உயர் ரக பட்டால் ஆன இந்த மடித்த உடை பிரபலமானது.

2. கேட் மிடில்டன் (Kate Middleton)


32 வயதாகும் இங்கிலாந்து இளவரசியான கேட் மிடில்டன் அணியும் ஆடை அலங்காரங்களில் எப்போதும்  நேர்த்தித்தன்மையினை காணலாம். சென்ற வருடம் அவர் மேற்கொண்ட அரச சுற்றுப்பயணங்களின் போதும் பல புதுமையான உடைகளில் அவரை காணமுடிந்தது. மேலும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணங்களில் இந்த வசீகரிக்கும் வெள்ளை, நீல நிற உடையில் கேட் அபாரமாக காட்சிதந்திருந்தார். இவருக்கு கவர்ந்திழுக்கும் உடைக்கான விருதை வழங்கியிருக்கிறது.

3.ஜெனிபர் லாரன்ஸ் (Jennifer Lawrence)


ஹாலிவூட் சூப்பர் திரைப்படங்களின் ஒன்றான ஹாங்கர் கேம்ஸ் படத்தின் நாயகியான ஜெனிபர் லாரன்ஸ்
அப் படங்களுக்கும் பின் புகழ் பெற்றார். ஆஸ்கார் பட விழாவில் தன் முழு ஃபேஷன் திறனை காட்டி சிவப்பு நிற டியோர் கவுன் உடையில் ஜெனிபர் தோன்றியது பலரையும் வாவ் போட வைத்தது. அதோடு சென்ற ஆண்டின் அனேக திரைப்பட "ரெட் கார்பட்"டுக்களில் அவர் ஆச்சரியபடவைக்கும் வடிவமைப்பு உடைகளில் வந்து அனைவரையும் கவர்ந்து சென்றுள்ளார்.

4. மைக்கல் டாக்ரி (Michelle Dockery)


பிரபல ஹாலிவூட் தொலைக்காட்சி தொடர்களிலும் பல திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்ற  Michelle Dockery சென்ற வருடம் இடம்பெற்ற பல திரைப்பட விழாக்களில் குறைபாடற்ற நவீன ஆடை அலங்காரங்களில் வருகை தந்திருந்தார். மேலும் 32 வயதாகும் Michelle இன் சிறந்த தருணம் அவர் கோல்டன் குளோப் விழாவில் வெள்ளி நிற strapless sequin உடையில் வந்திருந்தமையே.

5.ரோஸி ஹண்டிங்டன்-(Rosie Huntington-Whiteley)


பிரபல மாடல் மற்றும் நடிகையான ரோஸி பட விழாக்கள் தவிர்ந்த வெளிப்பயணங்களின் போது அணியும் ஆடைகள் பொருத்தமாக அமைவதாகவும் சிறந்த உடைகளாகவும் இருப்பதாக தெரிவிக்கிறது.

6.விக்டோரியா பெக்காம் (Victoria Beckham)

ப்ஃஷன் டிசைனரான விக்டோரியா பெக்காம் பிரிட்டிஷ் ஃபேஷன் விருதுகளில் பிராண்ட் ஆப்ஃ தி இயர் எனும் விருதை வென்றிருப்பது குறிப்பிடதக்கது. அதோடு அவர் சொந்தமாக லண்டனில் ஆடம்பர கடை ஒன்றினையும் நடாத்தி வருகிறார்.

comments powered by Disqus